பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்


பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்
x

image courtesy: PTI

தினத்தந்தி 30 July 2024 12:44 AM GMT (Updated: 30 July 2024 1:24 AM GMT)

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

3-வது நாளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் 5-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

துப்பாக்கி சுடுதல்:- ஸ்ரேயாசி சிங், ராஜேஸ்வரி குமாரி (பெண்கள் டிராப் பிரிவு தகுதி சுற்று), பகல் 12 30 மணி. சரப்ஜோத் சிங்-மனு பாக்கர் (இந்தியா) -ஜின் ஓ யே-வோன்ஹோ லீ (தென்கொரியா), (10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயம்), பகல் 1 மணி, பிரித்விராஜ் தொண்டைமான் (டிராப் 2-வது நாள் தகுதி சுற்று), பகல் 12 30 மணி.

ஆக்கி: இந்தியா-அயர்லாந்து (ஆண்கள்) லீக் சுற்று ஆட்டம், மாலை 4 45 மணி.

பேட்மிண்டன்:- சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (இந்தியா) - முகமது ரியான் அட்ரியான்டோ-பஜர் அல்பியான் (இந்தோனேசியா), (ஆண்கள் இரட்டையர் லீக் சுற்று), மாலை 5 30 மணி. அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ (இந்தியா)- செத்யானா மபசா-ஏஞ்சலா யு (ஆஸ்திரேலியா), (பெண்கள் இரட்டையர் லீக் சுற்று) மாலை 6.20 மணி.

துடுப்பு படகு:- பால்ராஜ் பன்வார் (ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் கால்இறுதி), பகல் 1.40 மணி.

வில்வித்தை:- அங்கிதா பகத் (இந்தியா)-வியோலிடா மைசோர் (போலந்து), மாலை 5.14 மணி, பஜன் கவுர் (இந்தியா)-சிபா நுராபிபா (இந்தோனேசியா), மாலை 5.27 மணி, (பெண்கள் தனிநபர் பிரிவு), தீரஜ் பொம்மதேவரா-ஆடம் லீ (செக்குடியரசு), (ஆண்கள் தனிநபர் பிரிவு), இரவு 9 15 மணி.

குத்துச்சண்டை:- அமித் பன்ஹால் (இந்தியா)- பேட்ரிக் சினிம்பா (ஜாம்பியா), (ஆண்கள் 51 கிலோ தொடக்க சுற்று), இரவு 7.16 மணி, ஜாஸ்மின் (இந்தியா)-நெஸ்டி பெட்சியோ (பிலிப்பைன்ஸ்), (பெண்கள் 57 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்று), இரவு 9.24 மணி.


Next Story