பாரீஸ் ஒலிம்பிக்: டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை


பாரீஸ் ஒலிம்பிக்: டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை
x

Image Courtesy : AFP

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளைக் காண 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று(வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மொத்தம் 35 ஸ்டேடியங்களில் நடக்கிறது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளைக் காண இதுவரை 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ஒரு கோடி டிக்கெட்டுகள் தயாரிக்கப்பட்ட நிலையில், விற்பனை அளவு மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த 1999-ம் ஆண்டு நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 83 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story