பாரீஸ் ஒலிம்பிக்; இந்திய டேபிள் டென்னிஸ் மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்


பாரீஸ் ஒலிம்பிக்; இந்திய டேபிள் டென்னிஸ் மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: AFP 

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் டேபிள் டென்னிஸ் மகளிர் அணி பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (ரவுண்ட் ஆப் 16 சுற்று) இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ருமேனியாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியின் முதல் இரு ஆட்டங்களை எளிதாக வென்ற இந்திய அணி 2-0 (அர்ச்சனா கிரிஷ் காமத் - ஸ்ரீஜா அகுலா இணை வெற்றி, மனிகா பத்ரா வெற்றி) என முன்னிலை பெற்றது. இதையடுத்து தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய ருமேனியா அடுத்த இரு ஆட்டங்களை (ஸ்ரீஜா அகுலா தோல்வி, அர்ச்சனா கிரிஷ் காமத் தோல்வி) கைப்பற்றியது.

இதனால் ஆட்டம் 2-2 என சமனுக்கு வந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மனிகா பத்ரா, ருமேனியாவின் அடினா டயகோனுவை வீழ்த்தினார். இதனால் இந்திய மகளிர் அணி 3-2 என்ற செட் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


Next Story