துப்பாக்கி சுடுதல் போட்டி: வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு இந்திய இணை தகுதி


துப்பாக்கி சுடுதல் போட்டி: வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு இந்திய இணை தகுதி
x

33-வது ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4-வது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றில் இந்திய இணைகளான சரப்ஜோத் சிங்- மனு பாக்கர் மற்றும் அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் கலந்து கொண்டனர்.

இதில் முதல் 2 இடங்களை பிடித்த துருக்கி மற்றும் செர்பிய அணிகள் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களுக்கான இறுதி போட்டியில் விளையாடுகின்றன.

3-வது இடம் பிடித்த இந்திய இணையான சரப்ஜோத் சிங்- மனு பாக்கர் ஜோடி 4-வது இடம்பிடித்த தென் கொரிய இணையுடன் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மல்லுகட்ட உள்ளது.


Next Story