பாரீஸ் ஒலிம்பிக்; நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அர்ஜுன் பாபுதா


பாரீஸ் ஒலிம்பிக்; நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அர்ஜுன் பாபுதா
x

Image Courtesy: AFP

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அர்ஜுன் பாபுதா 4வது இடத்தை பிடித்தார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றுக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா பங்கேற்றார். இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் அபாரமாக செயல்பட்ட பாபுதா இறுதிகட்டத்தில் தடுமாறியதால் 208.4 புள்ளிகள் மட்டுமே பெற்று 4வது இடம் பிடித்தார்.

7வது ரவுண்டின் முடிவில் குரோஷியாவின் மீரான் மரிசிச் 209.8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு (8வது ரவுண்ட்) தகுதி பெற்றதால் அர்ஜுன் பாபுதா 208.4 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை தவறவிட்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.


Next Story