பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்


பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 6 Aug 2024 11:13 AM GMT (Updated: 6 Aug 2024 1:13 PM GMT)

வினேஷ் போகத் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ஒக்ஸானா லிவாச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பாரீஸ்,

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் மல்யுத்தம் - பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் வினேஷ் போகத், உக்ரைனின் ஒக்ஸானா லிவாச் உடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் இந்த ஆட்டத்தில் வினேஷ் போகத் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ஒக்ஸானா லிவாச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் வினேஷ் போகத், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் உடன் மோத உள்ளார்.


Next Story