டி20 உலகக்கோப்பை: பாண்ட்யா அதிரடி... இந்தியா 196 ரன்கள் குவிப்பு


டி20 உலகக்கோப்பை: பாண்ட்யா அதிரடி... இந்தியா 196 ரன்கள் குவிப்பு
x

Image Courtesy: AFP  

தினத்தந்தி 22 Jun 2024 4:07 PM GMT (Updated: 22 Jun 2024 4:15 PM GMT)

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்தார்.

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் விராட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரோகித் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து விராட் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

இதில் விராட் 37 ரன்னிலும், பண்ட் 36 ரன்னிலும் அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஷிவம் துபே மற்றும் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய துபே 34 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.இதையடுத்து அக்சர் படேல் களம் இறங்கினார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சகிப், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி ஆட உள்ளது.


Next Story