டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை இழந்த வங்காளதேசம்


டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை இழந்த வங்காளதேசம்
x
தினத்தந்தி 25 Jun 2024 4:46 AM GMT (Updated: 25 Jun 2024 6:05 AM GMT)

நடப்பு டி20 உலக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் வங்காளதேசம் வெளியேறியுள்ளது.

கிங்ஸ்டவுன்,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்துள்ளது. இதனால் வங்காளதேசம் வெற்றி பெற 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை 12.1 ஓவர்களில் எட்டினால் வங்காளதேசம் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் களமிறங்கியது. இருப்பினும் அந்த அணியால் குறிப்பிட்ட அந்த 12.1 ஓவர்களில் எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

தற்போது ஆறுதல் வெற்றி பெற போராடி வருகிறது.


Next Story