டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய ஆஸ்திரேலியா


டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 25 Jun 2024 6:01 AM GMT (Updated: 25 Jun 2024 6:08 AM GMT)

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியுள்ளது.

கிங்ஸ்டவுன்,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைந்தன. இதில் இன்று நடைபெற்ற குரூப் 1 பிரிவிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் மற்றொரு அணி (இந்தியா ஏற்கனவே தகுதி) எது தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டத்தில் வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றிருந்தால் முன்னாள் சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்த ஆஸ்திரேலியா, வங்காளதேசத்திற்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story