டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா


டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 24 Jun 2024 9:18 AM GMT (Updated: 24 Jun 2024 9:19 AM GMT)

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாடிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஆண்டிகுவா,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ள தென் ஆப்பிரிக்கா நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக வலம் வருகிறது.

இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற மாபெரும் சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன்னர் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா (2 முறை) தலா 6 வெற்றிகள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள தென் ஆப்பிரிக்கா புதிய சாதனை படைத்துள்ளது.


Next Story