டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: புள்ளிகளை இழந்த பாகிஸ்தான், வங்காளதேசம்... காரணம் என்ன..?


டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: புள்ளிகளை இழந்த பாகிஸ்தான், வங்காளதேசம்... காரணம் என்ன..?
x

image courtesy: ICC

தினத்தந்தி 26 Aug 2024 12:51 PM GMT (Updated: 26 Aug 2024 1:27 PM GMT)

பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. அதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது. இதனால் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சில புள்ளிகளை கூடுதலாக பெற்ற வங்காளதேசம் முன்னேறியது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 6 ஓவர்கள் குறைவாக வீசிய பாகிஸ்தான் அணிக்கு 6 புள்ளிகளும், 3 ஓவர்கள் குறைவாக வீசிய வங்காளதேச அணிக்கு 3 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த வங்காளதேசம் 7-வது இடத்திற்கு சரிந்துள்ளது. பாகிஸ்தான் அதே இடத்தில் தொடருகிறது.

மேலும் போட்டி கட்டணத்தில் இருந்து பாகிஸ்தான் அணிக்கு 30 சதவீதமும், வங்காளதேச அணிக்கு 15 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.


Next Story