வங்காளதேசம் அபார பந்துவீச்சு... ஆப்கானிஸ்தான் 115 ரன்கள் சேர்ப்பு


வங்காளதேசம் அபார பந்துவீச்சு... ஆப்கானிஸ்தான் 115 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 25 Jun 2024 2:09 AM GMT (Updated: 25 Jun 2024 3:11 AM GMT)

அரையிறுதிக்கு முன்னேறும் கடைசி அணி எது என்பதை தீர்மானிக்கும் முக்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேச அணிகள் விளையாடி வருகின்றன.

செயிண்ட் வின்செண்ட்,

இறுதிகட்டத்தை எட்டியுள்ள டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் கடைசி அணி எது என்பதை தீர்மானிக்கும் முக்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குர்பாஸ் - ஜத்ரான் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜத்ரன் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதிரடி ஆட்டக்காரர் குர்பாஸ் ரன்கள் குவிக்க தடுமாறினார். அவர் 55 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒமர்சாய் (10), குல்புதின் (4), நபி (1), ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ரஷித் கான் 3 சிக்சர்கள் விளாச ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது.

வங்காளதேச அணி தரப்பில் ரிஷத் ஹுசேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறும். வங்காளதேச அணி 12 ஓவர்களில் இலக்கை கடந்தால் வங்காளதேசம் அரையிறுதிக்கு முன்னேறும். மாறாக 12 ஓவர்களை கடந்து வங்காளதேசம் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும்.


Next Story