2வது டெஸ்ட்: போப் சதம்...முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்த இங்கிலாந்து


England scored 416 runs in the first innings
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 19 July 2024 4:37 AM GMT (Updated: 19 July 2024 5:29 AM GMT)

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக போப் 121 ரன்கள் எடுத்தார்.

நாட்டிங்ஹாம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதையடுத்து போப் களம் இறங்கினார்.

பென் டக்கட் - போப் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் டக்கட் அரைசதம் அடித்த நிலையில் 71 ரன்னிலும், சதம் அடித்த ஓலி போப் 121 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ரூட் 14 ரன், புரூக் 36 ரன், ஸ்டோக்ஸ் 69 ரன், ஜேமி ஸ்மித் 36 ரன், வோக்ஸ் 37 ரன், அட்கின்சன் 2 ரன், ஷோயர் பாஷீர் 5 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


Next Story