முதலாவது டி20 போட்டி: இந்தியா அபார பந்துவீச்சு... ஜிம்பாப்வே 115 ரன்கள் சேர்ப்பு


முதலாவது டி20 போட்டி: இந்தியா அபார பந்துவீச்சு... ஜிம்பாப்வே 115 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 6 July 2024 12:44 PM GMT (Updated: 6 July 2024 12:50 PM GMT)

இந்தியா - ஜிம்பாப்வே முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஹராரே,

ஜிம்பாப்வே - இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன இன்னசண்ட் கையா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன்பின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன வெஸ்லி மாதேவேரே உடன் கை கோர்த்த பிரையன் பென்னட் சிறுது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இணை பிரிந்ததும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களான ரவி பிஷ்னோய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் கடும் குடைச்சல் கொடுத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ரசா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணியில் 4 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனதும் அடங்கும். இறுதி கட்டத்தில் கிளைவ் மடாண்டே ஒரளவு சமாளித்து அணி 100 ரன்களை கடக்க உதவினார். அவர் 29 ரன்கள் அடித்தார்.

20 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் அடித்துள்ளது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story