பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வில்வித்தை அணியின் பயிற்சியாளர் செல்ல அனுமதி மறுப்பு


பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வில்வித்தை அணியின் பயிற்சியாளர் செல்ல அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 22 July 2024 10:28 AM GMT (Updated: 22 July 2024 10:31 AM GMT)

இந்திய வில்வித்தை அணியின் பயிற்சியாளராக தென்கொரியாவைச் சேர்ந்த பேக் வூங் கி இருந்து வருகிறார்.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி தொடங்குகிறது. இதில் வில்வித்தை போட்டியில் இந்தியாவில் இருந்து திரஜ் பொம்மதேவரா, பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய், தீபிகா குமாரி, பஜன் கவுர், அங்கிதா பகத் ஆகிய 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்களை தயார்படுத்துவதற்கு பயிற்சி முகாம், வெளிநாட்டில் தொடர்ச்சியாக பயிற்சி என்று மத்திய அரசு ரூ, 39.18 கோடி செலவிட்டுள்ளது.

இந்திய வில்வித்தை அணியின் பயிற்சியாளராக தென்கொரியாவைச் சேர்ந்த பேக் வூங் கி இருந்து வருகிறார். ஒலிம்பிக் போட்டிக்காக வீரர், வீராங்கனைகளுடன் பாரீஸ் சென்றிருந்தார். அவர்களுடன் இரண்டு இந்திய பயிற்சியாளர், இரண்டு இந்திய உதவியாளர்களும் சென்றிருந்தனர். ஆனால் இந்திய ஒலிம்பிக் சங்கம், குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அனுமதிக்க முடியும், வெளிநாட்டு பயிற்சியாளர் என்ற அடிப்படையில் வூங் கிக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்கான அனுமதி கடிதத்தை அளிக்க முடியாது என்று கூறி பாரீஸ் செல்ல அனுமதி மறுத்துள்ளது.


Next Story