'பிரதமர் மோடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்' - ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி முன்னாள் பிரதமராக மாறப்போகிறார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"பிரதமர் மோடி தன்னை ஒரு அசாதாரணமான மனிதரைப் போல் காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் முன்னாள் பிரதமராக மாறப்போகிறார் என்பதையே தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன. அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இதுவே இந்த தேர்தலின் மூலம் கிடைத்துள்ள செய்தி."
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story