துப்பாக்கி முனையில் மருத்துவ மாணவர்கள் 20 பேர் கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்


துப்பாக்கி முனையில் மருத்துவ மாணவர்கள் 20 பேர் கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 17 Aug 2024 7:56 AM GMT (Updated: 17 Aug 2024 8:17 AM GMT)

மருத்துவ மாணவர்கள் 20 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபுஜா,

நைஜீரியா நாட்டின் மைடுகுரி மற்றும் ஜோஸ் நகரங்களை சேர்ந்த மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேர் நேற்று அந்நாட்டின் பினியூ நகரில் நடைபெற்ற மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்க பஸ்சில் சென்றனர்.

பினியூ நகரின் ஒடுக்பு என்ற பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி ஏந்திய கும்பல் திடீரென பஸ்சை இடைமறித்தது.

மேலும், பஸ்சில் இருந்த 20 மாணவர்களை அந்த கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் கடத்தப்பட்ட மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நைஜீரியாவில் பல்வேறு கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை இக்கும்பல்கள் கடத்தி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story