லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு


LIVE
தினத்தந்தி 15 Oct 2024 1:49 AM GMT (Updated: 15 Oct 2024 4:52 PM GMT)

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை


Live Updates

  • 15 Oct 2024 9:43 AM GMT

    விழுப்புரம் அருகே சத்திப்பட்டு கிராமத்தில் வீட்டின் கூரை மீது மரம் முறிந்து விழுந்ததில் பாலகிருஷ்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார்.

  • 15 Oct 2024 9:36 AM GMT

    கனமழை எதிரொலி: சென்னையில் 10 விமானங்கள் ரத்து

    கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 14 விமானங்களின் சேவை தாமதமாகி உள்ளன. மேலும் சென்னையில் இருந்து மஸ்கட், கொழும்பு, டெல்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • 15 Oct 2024 9:36 AM GMT

    தத்தளிக்கும் சென்னை.. மின்சாரம் துண்டிப்பு

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

    வியாசர் பாடியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வியாசர்பாடி பிரதான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. முல்லை நகர், பாரதி நகர் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  

  • 15 Oct 2024 9:17 AM GMT

    சென்னையில் பெய்த மழை காரணமாக 8 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி

    பெரம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதை

    கணேசபுரம் சுரங்கப்பாதை

    சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை

    மேட்லி சுரங்கப்பாதை

    கெங்கு ரெட்டி ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

    வில்லிவாக்கம்

    சூரப்பட்டு அண்டர் பாஸ் ஆகியவை தற்போது மூடப்பட்டுள்ளன.

  • 15 Oct 2024 8:56 AM GMT

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

    ரெட் அலர்ட்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

    ஆரஞ்சு அலர்ட்

    வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை

    மஞ்சள் அலர்ட்

    திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை

  • 15 Oct 2024 8:51 AM GMT

    சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்டோபர் 16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • 15 Oct 2024 7:58 AM GMT

    ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து நெரிசல்

    தொடர் கனமழை காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணித்து நிற்கின்றன. எஸ்.ஆர்.பி. டூல்ஸ் முதல் கந்தன்சாவடி வரை வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். 

  • 15 Oct 2024 7:55 AM GMT

    சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் வடபழனி 100 அடி சாலையில் மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி

     

  • 15 Oct 2024 7:47 AM GMT

    முன்களப்பணியாளர்களுடன் தேநீர் அருந்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் புளியந்தோப்பு பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெருநகர சென்னை மாநகராட்சி முன்களப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர், அருகில் இருந்த தேநீர் கடைக்கு அவர்களை அழைத்து சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தினார். 



     



Next Story