பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு
1965-ல் 5,500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது.
சென்னை,
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடி செலவில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. 1965-ல் 5,500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது.
இந்த நிலையில் பெரும்பாக்கம் கால்வாய் பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றி, சதுப்பு நில இல்ல பகுதியை சுற்றி கரைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இயற்கைக்கு ஏற்ற பொருட்கள் மூலம் நடைபாதை, சிறு பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்ள வனத்துறை டெண்டர் கோரி உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story