'2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும்' - தமிழிசை சவுந்தரராஜன்
2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது. அறிவிக்கப்படாத அவசரநிலை இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளே திருப்தியற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்களே இந்த ஆட்சி பல தவறுகளை செய்கிறது என்று நினைக்கிறார்கள். எனவே 2026-ல் தி.மு.க. கூட்டணி நிச்சயமாக பிரிந்து போகும். இந்த கூட்டணி அப்படியே இருக்காது" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story