திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுகள் அறிவிப்பு


திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2025 10:51 PM IST (Updated: 5 Jan 2025 6:09 AM IST)
t-max-icont-min-icon

அறிவிக்கப்பட்ட விருதுகளை திருவள்ளுவர் தினத்தன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

சென்னை,

திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு.படிக்கராமுக்கு வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கு வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த எல்.கணேசனுக்கு வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது ரவிக்குமார் எம்.பிக்கு வழங்கப்படுகிறது.

2024ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்து வாவாசிக்கு வழங்கப்படுகிறது.மகாகவி பாரதியார் விருது- கவிஞர் கபிலனுக்கு வழங்கப்படுகிறது.பாவேந்தர் பாரதிதாசன் விருது பேரொளி பொன். செல்வகணபதிக்கு வழங்கப்படுகிறது. தமிழ்தென்றல் திரு.வி.க விருது- மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கு வழங்கப்படுகிறது. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- வே.மு.பொதியவெற்பனுக்கு வழங்கப்படுகிறது.வரும் திருவள்ளுவர் தினத்தன்று (ஜனவரி 15) ரூ.5 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்துடன் இவ்விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.


Next Story