30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்


30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
தினத்தந்தி 30 Dec 2024 9:29 AM IST (Updated: 31 Dec 2024 11:04 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 30 Dec 2024 12:07 PM IST

    பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

  • 30 Dec 2024 12:03 PM IST

    பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியா தோல்வி

    பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்தது. 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.  

  • 30 Dec 2024 11:43 AM IST

    பாக்சிங் டே டெஸ்ட்:

    இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற இன்னும் 186 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றிபெற 2 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆட்டம் நிறைவடைய இன்னும் 15 ஓவர்கள் உள்ளன.

  • 30 Dec 2024 11:21 AM IST

    பாக்சிங் டே டெஸ்ட்:

    இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற இன்னும் 197 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றிபெற 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆட்டம் நிறைவடைய இன்னும் 19 ஓவர்கள் உள்ளன.

  • 30 Dec 2024 11:17 AM IST

    மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் - எடப்பாடி பழனிசாமி

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • 30 Dec 2024 10:12 AM IST

    புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடங்கி வைப்பு:-

    புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளும் இனி மாதம் ரூ. 1000 பெறலாம். 

  • 30 Dec 2024 9:31 AM IST

    பாக்சிங் டே டெஸ்ட்

    பாக்சிங் டே டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் தற்போதைய நிலவரப்படி இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 233 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றிபெற 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்


Next Story