மதுவிலக்கு மாநாடு ஏன்? - திருமாவளவன் விளக்கம்


மதுவிலக்கு மாநாடு ஏன்? - திருமாவளவன் விளக்கம்
x
தினத்தந்தி 12 Sep 2024 1:25 AM GMT (Updated: 12 Sep 2024 1:42 AM GMT)

வி.சி.க. சார்பில், கள்ளக்குறிச்சியில் மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது.

சென்னை,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு குறித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"கள்ளக்குறிச்சி சாராய மரணம் தான் மதுவிலக்கு மாநாட்டை விசிக நடத்துவதற்கு காரணம். திமுகவை மிரட்டவும் சீட்டு பேரத்திற்காகவும் மாநாடு நடத்துவதாக சிலர் பேசுகிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி என சிலர் பேசிகிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, சீட்டு குறித்து சிந்திப்பேன். மாநாடு நடத்த வேண்டுமென்று எனக்கு சொல்லிக் கொடுத்தது மக்கள்தான்.

தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட வேண்டும். 2016-ல் திமுக தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என வாக்குறுதி அளித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கும்போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்." என்றார்.


Next Story