வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க கால அவகாசம்


வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க கால அவகாசம்
x
தினத்தந்தி 13 Jun 2024 12:36 PM GMT (Updated: 13 Jun 2024 1:10 PM GMT)

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் வரும் 17-ம் தேதி வரை இயக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளை முதல் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டது. தடையை மீறி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை வரும் 17-ம் தேதி வரை இயக்க அவகாசம் அளித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்குவதற்கான கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையொட்டி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story