தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


தினத்தந்தி 21 Aug 2024 5:32 AM GMT (Updated: 21 Aug 2024 6:24 AM GMT)

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக தொழில்துறை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 47 தொழில் நிறுவனங்கள் திட்டங்களை தொடங்கின. அதன்படி ரூ,17 ஆயிரத்து 616 கோடி முதலீடுகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதன் மூலம் ஏறத்தாழ 65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.

அதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டு ரூ,51 ஆயிரம் கோடிக்கான 28 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஒட்டுமொத்தமாக ரூ,68 ஆயிரத்து 873 கோடிக்கு மேல் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளதால் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story