சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை


சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை
x
தினத்தந்தி 24 Sep 2024 10:19 AM GMT (Updated: 24 Sep 2024 11:22 AM GMT)

சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை விமான நிலையம் தமிழகத்தில் முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிற்குள் விமானம் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பயணிகளை வழியனுப்ப, வரவேற்க வந்தவர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் வராத நிலையில், பார்கிங் மேலாண்மை செய்யும் நிறுவனத்தின் ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களை உள்ளே வரக்கூடாது என தடுப்பதாக பயணிகள் புகார் கூறினர்.மெட்ரோ நிலையம் உள்ள பார்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு நடந்து வருமாறு ஊழியர்கள் அறிவுறுத்தினர். விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள், விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story