செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x
தினத்தந்தி 25 Sept 2024 6:11 PM IST (Updated: 25 Sept 2024 6:21 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* நாட்டில் காங்கிரசை விட நேர்மையற்ற கட்சி வேறு எதுவும் கிடையாது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

* நில மோசடி வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லோக் ஆயுக்தாவுக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

* சிறந்த கைத்தறி நெசவாளர், வடிவமைப்பாளர்கள் மற்றும் இளம் வடிவமைப்பாளர்களுக்கான விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* பசிபிக் பெருங்கடலில் சீன ராணுவம் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

* சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

* லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை பிரிவு தலைவர் கொல்லப்பட்டார்.

* 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட இலக்கு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஆப்பிள் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சென்றடைய வேண்டும் என்றால், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

* ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது.

* ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் 871 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.


Next Story