செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x
தினத்தந்தி 12 Aug 2024 9:31 AM GMT (Updated: 12 Aug 2024 11:38 AM GMT)

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

* 4 புதிய மாநகராட்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

* பங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி செய்கிறது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

* சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

* பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா ராக் இசை கச்சேரி, ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் முடிவடைந்தது.

* எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

* வங்காளதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெபாத் பதவியேற்றார்.

* முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து வயநாட்டில் நிறுத்தப்பட்ட தேடுதல் பணிகள் மீண்டும் தொடங்கியது.

* ராஜஸ்தானில் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

* நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: ஆண்ட்ரி ரூப்லெவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


Next Story