செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x
தினத்தந்தி 7 Aug 2024 10:02 AM GMT (Updated: 7 Aug 2024 10:45 AM GMT)

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். 'சாம்பியன்களின் சாம்பியன் வினேஷ் போகத்' எனவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

* புதுச்சேரி கவர்னராக கைலாசநாதன் பதவியேற்றுள்ளார்.அவருக்கு அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனமக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

* கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

* இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிட உள்ளார்.

* அ.தி.மு.க. குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

* வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 மாதங்களுக்கு மின்சார கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அம்மாநில மின்சாரத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

* தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

* வங்காள தேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

* சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை கண்டறிய புதிய வசதி தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.


Next Story