செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x
தினத்தந்தி 31 July 2024 8:30 AM GMT (Updated: 31 July 2024 8:37 AM GMT)

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று அதிகாலை ஈரானில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

* கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு தொடர்பான பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மீட்புப்பணிகள் 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

* பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார்.

* நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* நிலமோசடி வழக்கில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

* சென்னை மாநகராட்சியில் தொழில் வரி 35 சதவீதம் வரை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

* குஜராத்தில் சண்டிப்புரா வைரஸ் பாதிப்புக்கு 56 பேர் பலியாகி உள்ளனர்.

* கடைசி டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதோடு தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

* 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பாகிஸ்தானின் மொசின் நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story