செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x
தினத்தந்தி 11 July 2024 8:31 AM GMT (Updated: 11 July 2024 8:41 AM GMT)

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி இந்தியா வந்தடைந்தார்.

* எல்லைப் பகுதிகளில் நிலைமையை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீனா அறிவித்துள்ளது.

* அசாமில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

* தமிழ்நாட்டில் தொடர் தோல்வி கண்ட பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

* இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளது, யுத்தத்தை கொடுக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

* நீட் தேர்வு ரத்தாகிறதா...? பெரும் எதிர்பார்ப்புக்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

* விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் ரைபகினா

* ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்-அமைச்சர்' திட்டத்தைத் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

* வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளனர் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

* முதலாவது டெஸ்ட்: அட்கின்சன் அபார பந்துவீச்சு... வெஸ்ட் இண்டீஸ் 121 ரன்களில் ஆல் அவுட்

* அமலாக்கத்துறை வழக்கில் செந்தில்பாலாஜி மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக சென்னை செசன்ஸ் கோர்ட்டு அறிவித்துள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷியா வெற்றி பெறாது என்றும் கூறினார்.


Next Story