செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x
தினத்தந்தி 28 Jun 2024 10:30 AM GMT (Updated: 28 Jun 2024 11:00 AM GMT)

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு 65 ஆக உயர்ந்துள்ளது.

* நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

* டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

* சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்ட வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்காளத்தை சேர்ந்த அவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

* கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பொலிவியாவை வீழ்த்தி உருகுவே அபார வெற்றி பெற்றது.

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

* நிலமோசடி வழக்கில் சிறையில் உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல் -மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

* நீட் முறைகேடு தொடர்பாக மக்களவையில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஜூலை 1ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* நேற்று ஜியோ இன்று ஏர்டெல் - ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிறுவனங்கள்

* டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Next Story