முதல்-அமைச்சரின் இணைச் செயலாளராக லட்சுமிபதி நியமனம்
முதல்-அமைச்சரின் இணைச் செயலாளராக லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சரின் இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லெட்சுமிபதி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story