தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 8 Sep 2024 8:05 AM GMT (Updated: 8 Sep 2024 10:37 AM GMT)

2026 தேர்தல் தொடர்பாக தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

சிகாகோ நகரில் பிரமாண்டமாக நடந்த தமிழர் கலை நிகழ்ச்சியில், பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இன்று இரவு 7.30 மணிக்கு காணொலி வாயிலாக இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story