முதல்-அமைச்சரின் முதல் தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்


முதல்-அமைச்சரின் முதல் தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்
x
தினத்தந்தி 20 Aug 2024 6:37 AM GMT (Updated: 20 Aug 2024 6:46 AM GMT)

முதல்-அமைச்சரின் முதல் தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் தனி செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சரின் முதல் தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2-வது தனி செயலாளராக எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 3-வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story