கார் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது


கார் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
x

மூலக்குளம் அருகே கார் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது 51). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு தனது காரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் திடீரென கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.

இதை தட்டிக்கேட்ட சுதர்சனுக்கு அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அந்த நபரை பிடித்து மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் சாணரப்பேட்டையை சேர்ந்த இசக்கி (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story