வேலைவாய்ப்பு பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்


வேலைவாய்ப்பு பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
x

புதுவையில் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு பெற்றவர்கள் வேலைவாய்ப்பு பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு பெற்றவர்கள் வேலைவாய்ப்பு பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசின் வேலைவாய்ப்பக இயக்குனர் மாணக்கதீபன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு பதிவு

புதுவை அரசு தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பகம் 2022-ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் விவரங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக பள்ளி கல்வித்துறையின் வாயிலாக புதுவை மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து விவரம் பெறப்பட்டது.

இதனை தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தின் உதவியோடு மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது. இவர்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைய தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதிவிறக்கம்

தற்போது இந்த வேலை முடிவடைந்து பதிவு செய்த மாணவ, மாணவிகளின் பட்டியல் விவரம், வேலைவாய்ப்பு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் செயல்முறை ஆகியவை https://labour.py.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் அந்த பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட அவர்களது பதிவு எண்ணை குறித்து வைத்துக்கொண்டு அவர்களது வேலைவாய்ப்பு பதிவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story