அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி சாவு
வில்லியனூர் அடுத்த சிவராந்தகம்பேட் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி குடும்பத்தினர் பிரிந்து சென்ற வேதனையில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து உயிரிழந்தார்.
வில்லியனூர்
வில்லியனூர் அடுத்த சிவராந்தகம்பேட் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் பாக்கியராஜ், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் பிரச்சினை செய்து வந்தார். இதனால் வெங்கடேஸ்வரி தனது மகள்களுடன், தமிழக பகுதியான தென்னல் கிராமத்தில் வசித்து வருகிறார். மனைவி, மகள்கள் பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த பாக்கியராஜ் நேற்று அளவுக்கு அதிகமாக மதுகுடித்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
இது குறித்து வெங்கடேஸ்வரி அளித்த புகாரின்பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story