திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி
புதுவை பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி இன்று இரவு நடந்தது.
வில்லியனூர்
பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி இன்று இரவு நடந்தது.
திருக்கல்யாணம்
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியில் மிகவும் பழமையான பிரசிதிப்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. 25-ந் தேதி ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு கூத்தாண்டவர் சாமிக்கு திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் வந்து தாலிக்கட்டிக்கொண்டனர்.
அழகிப்போட்டி
இதனிடையே மாலை 6 மணிக்கு திருநங்கைகளுக்கான அழகிபோட்டி நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். அவர்கள் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். இதைக்காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அழுகள நிகழ்ச்சியும், 18-ந் தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.