நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை


நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
x

புதுவையில் போதை கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் கோவிந்தசாலை, கண்டாக்டர் தோட்டம் பகுதி உள்ளது. இங்கு ரவுடிகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தும் கும்பல் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த கும்பல் போதையின் உச்சத்தில் சிலரை பிடித்து தாக்கியுள்ளனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. நேருவிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர், நேற்று காலை தனது ஆதரவாளர்கள் மற்றும் அந்த பகுதி மக்களுடன் மறைமலை அடிகள் சாலையில் உள்ள சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, வெங்கடாஜலபதி, நாகராஜ் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸ் தரப்பில், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கண்டாக்டர் தோட்டம் பகுதியில் தினந்தோறும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்கிறோம் என்று உறுதியளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். முற்றுகை காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story