நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x

சாரம் பகுதியில் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை சாரம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று பகல் 12 மணி முதல் 2 மணி வரை சாரம் பகுதி முழுவதும் தென்றல் நகர், வெங்கடேஸ்வரா நகர், பாலாஜி நகர், ஜெயராம் நகர், அன்னை தெரசா நகர், வேலன் நகர், லட்சுமி நகர், மகாத்மா நகர், சுந்தரமூர்த்தி நகர், திருமுடி சேதுராமன் நகர், அண்ணாமலை நகர், அய்யப்பன் நகர், வினோபா நகர், ஞானபிரகாசம் நகர், ஆனந்தரங்கபிள்ளை நகர், மடுவுபேட், கைலாஷ்நகர், அண்ணல் காந்தி நகர், கிருஷ்ணா நகர் (மேற்கு), பிருந்தாவனம், பழனிராஜூ உடையார் தோட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story