புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
x

காரைக்காலில் புகையிலை பொருட்கள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

காரைக்கால்

காரைக்கால் நகர் பகுதியான பஸ் நிலையம் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடையின் உரிமையாளரான கோவில்பத்து அக்ரகாரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர். அங்கிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story