கொமந்தான்மேடு தடுப்பணையில் மண் அரிப்பு


கொமந்தான்மேடு தடுப்பணையில் மண் அரிப்பு
x

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கொமந்தான்மேடு தடுப்பணை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார்.

பாகூர்

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கொமந்தான்மேடு தடுப்பணை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார்.

வெள்ளப்பெருக்கு

கர்நாடகம், தமிழகத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கட்டுகளில் தேக்கி வைத்திருந்த தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி - கடலூர் இடையே செல்லும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு, சித்தேரி அணைக்கட்டு மற்றும் கொமந்தான் மேடு அணைக்கட்டை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதில் கொமந்தான்மேடு தடுப்பணை கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று மாலை சித்தேரி, கொமந்தான்மேடு அணைக்கட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த அணையின் ஷட்டர்களை புதுப்பிக்கவும், ஆற்றின் கரைகளை மணல் மூட்டைகள் அடுக்கி பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது துணை சபாநாயகர் ராஜவேலு, செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது கொமந்தான்மேடு பகுதி மக்கள் அமைச்சரிடம் சரமாரியாக குற்றம் சாட்டினர். கரையை பலப்படுத்த முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.


Next Story