ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி


ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 1 Jun 2022 6:24 PM GMT (Updated: 2 Jun 2022 7:28 AM GMT)

புதுவையில் நடக்கும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி பெற்றது.

புதுச்சேரி

கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். இணைந்து நடத்தும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்-சீகம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 38-வது லீக் போட்டியில் டைட்டன்ஸ் அணி- அவெஞ்சர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் அவெஞ்சர்ஸ் அணி 67 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் விக்னேஷ்வரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

39-வது லீக் போட்டியில் ஸ்மாஷர்ஸ் அணியும் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ஸ்மாஷர்ஸ் அணி 56 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் மோஹித் மிதுன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தொடர்ந்து நடந்த 40-வது போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி, ஈகிள்ஸ் அணியை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்ரியாட்ஸ் அணியின் பரமேஸ்வரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


Next Story