2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை


2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
x

காரைக்காலில் வெவ்வேறு இடங்களில் 2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்காலில் வெவ்வேறு இடங்களில் 2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

5-ம் வகுப்பு மாணவி

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சாலை தக்களூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு சக்திவேல் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

தொழிலாளிக்கு வலைவீச்சு

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (43). கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் பிரதாப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story