மரக்கன்றுகள் நடும் விழா
பாகூர் உழவர் உதவியக அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது.
பாகூர்
புதுவை அரசு வேளாண்துறை, பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குநர் அலுவலகத்திற்கு உட்பட்ட பாகூர் உழவர் உதவியக அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவுக்கு பாகூர் உழவர் உதவியக வேளாண் அலுவலர் பரமநாதன் வரவேற்றார். இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சுற்றுச்சூழலை பேணிக்காக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் கோபாலன், முத்துக்குமரன், பாஸ்கரன் மற்றும் செயல்விளக்க உதவியாளர்கள் பிரபாசங்கர், வேணுகோபால், தனசேகர், ரங்கநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story