புதுவை, காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்


புதுவை, காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
x

புதுச்சேரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். காரைக்காலிலும் இந்த ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி

புதுச்சேரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். காரைக்காலிலும் இந்த ஊர்வலம் நடந்தது.

சீருடை அணிந்து வந்தனர்

காந்தி ஜெயந்தி, வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழா, 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். சார்பில் புதுவையில் இன்று ஊர்வலம் நடந்தது.

காமராஜர் சாலை பாலாஜி தியேட்டரில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை செல்வகணபதி எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, சிவசங்கரன் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்தபடி பங்கேற்றனர்.

காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன்வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக சென்று சுதேசி மில் அருகே ஊர்வலம் நிறைவடைந்தது.

அங்கு ஆதித்யா கல்விக்குழும நிறுவனர் ஆனந்தன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரவிக்குமார் கோரிகானா, முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராம ராஜசேகர், கோட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் அசம்பாவிதம் சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காரைக்கால்

காரைக்காலிலும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. காரைக்கால் பஸ் நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலத்தை மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். அமைப்பின் மாநில பொறுப்பாளர்கள் ஸ்ரீராம், சுரேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் சிவராமன், கணேஷ், இந்து முன்னணி நகர தலைவர் ராஜ்குமார் மற்றும் புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story