குண்டர் சட்டத்தில் ரவுடி கைது


குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
x

புதுவையில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியாங்குப்பம்

புதுச்சேரி முருங்கப்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் முகிலன் (வயது 26). ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள், 3 வழிப்பறி வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

தொடர்ந்து அவர், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார், மாவட்ட கலெக்டர் வல்லவனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் ஜாமீனில் வெளியே வந்த முகிலனை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story