ரவுடி, கொலை குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை


ரவுடி, கொலை குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை
x

அரியாங்குப்பத்தில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடி, கொலை குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதித்து துணை கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடி, கொலை குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதித்து துணை கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு

புதுச்சேரியை ஒட்டிய வளர்ந்து வரும் நகரமாக அரியாங்குப்பம் உள்ளது. இந்த பகுதியில் சமீப காலமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திருட்டு, வழிப்பறி, கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையும் தலை தூக்கி உள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் அரியாங்குப்பம், தவளக்குப்பம் போலீஸ் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது.

அரியாங்குப்பம் பகுதியில் குற்றச்செயலில் ஈடுபடுவதாக 67 பேரையும், தவளக்குப்பம் பகுதியில் 29 பேரையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஊருக்குள் நுழைய தடை

இந்தநிலையில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அரியாங்குப்பம் புதுக்குளம் பகுதியை சேர்ந்த ரவுடி குணா என்ற குணசீலன் (வயது 28), அரியாங்குப்பம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (28), சுப்பையா நகர் சேர்ந்த கதிர் என்ற கதிர்வேல் (29) ஆகியோர் ஊருக்குள் நுழைய தடை விதித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் துணை கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் அவர்கள் 2 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து துணை கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story