கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர் குடும்பத்தினர் சாலைமறியல்


கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர் குடும்பத்தினர் சாலைமறியல்
x

குடிநீர் வழங்கக்கோரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருபுவனை

குடிநீர் வழங்கக்கோரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு நூற்பாலை

திருபுவனையில் கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் அங்குள்ள சிலோன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் கூட்டுறவு நூற்பாலை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நூற்பாலை தற்போது இயங்காததால் மின்சாரம், குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சாலைமறியல்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் டேங்கர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் ,இன்று மாலை 4 மணி அளவில் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திராநகர் எதிரே திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்த திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தொடர்ந்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story